டயலொக், தடுக்கக்கூடிய பார்வை குறைபாட்டு தன்மையை ஒழிப்பதற்கான வி~ன் 2020 முன் முயற்சியுடன் 25வது கண் பரிசோதனையினை நிறைவு செய்துள்ளது

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஒரு மைல் கல்லாக தனது 25வது கண் பரிசோதனை நிலையத்தினை வெற்றிகரமாக நடாத்தியமையினை அறிவித்துள்ளது. 10 மாவட்டங்களில் 11,034 பேரை பரிசோதனை செய்து இது வரையில் 8,617 மூக்கு கண்ணாடிகளை விநியோகம் செய்துள்ளது. இது 2020ஆம் ஆண்டளவில் தடுக்கக்கூடிய பார்வை குறைபாட்டுத்தன்மையினை குறைப்பதற்காக சுகாதார அமைச்சின் தலைமையில், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பார்வை குறைபாட்டினை தடுப்பகளுக்கான சர்வதேச நிறுவனம் (IAPB) ஆகியவற்றின் உலகளாவிய முன்முயற்சியான விஷன் 2020 இனை ஆதரிப்பதற்கான நிறுவனத்தின் உறுதி மொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது.

2015ஆம் ஆண்டில் இந்த முயற்சியில் அதன் உறுதிப்பாட்டை தொடர்ந்து குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் இருந்து குறிப்பாக கிராம புறங்களில் வசிப்பவர்களிடமிருந்து இலங்கையர்களுக்கு கண் பரிசோதனை சேவைகளை வழங்குவதற்காக டயலொக் முதலீடு செய்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள டயலொக் இன் பிராந்திய விற்பனை குழுக்களால் ஆதரிக்கப்படுவதுடன் இந் நிறுவனம்ää பரிசோதனை நிலையங்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துகின்றது. அங்கு சான்றழிக்கப்பட்ட கண் பரிசோதனை குழுவினால் விரிவான திரையிடல்கள் நடாத்துவதுடன் மருந்துகளும் சேகரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் அடிப்படையில் வி~ன் 2020 கூட்டாண்மை ஒளியியல் வல்லுனர்கள் தனிப்பயனாக்கப்பட்ட மூக்கு கண்ணாடிகளை தயாரிக்கின்றார்கள். அதன் பின்னர் அவை தனித்தனி விநியோக நிகழ்வில் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. ஏனையவர்களை போல் அல்லாது இந்த முயற்சியின் தனித்துவம் மதிப்பு ஆகியவற்றின் மூலம் பயனாளிகள் தங்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட மூக்கு கண்ணாடிகளை பெற்றுக்கொள்கின்றார்கள். மேலும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஊடாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டப்படுகின்றார்கள்.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறுவன அதிகாரி ~Pயாம் மஜீத் கருத்து தெரிவிக்கையில், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையையும் நிறுவனங்களையும் மேம்படுத்தவதற்கும் வளப்படுத்தவதற்கும் எங்கள் தீர்மானத்தில் டயலொக் எப்போதும் உறுதியானது. அதே நேரத்தில் சமூகத்தின் பிரிவுகளுடைக்கிடையயே டிஜிட்டல் சேர்க்கைக்கும் வழிவகுக்கின்றது. மேலதிகமாக சமூகங்களின் வாழ்க்கை முறையினை மேம்படுத்தும் தகவல் தொடர்பு கருவிகளை இயக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில் நாங்கள் எப்போதும் செவிப்புலன் அல்லது பேச்சு சிக்கல்களை எதிர்கொள்கின்றவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் சமீபத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோக்கத்தை விரிவுப்படுத்தியுள்ளோம். 2007ஆம் ஆண்டு இரத்மலானை ஆடியோலெஜி மையம் மற்றும் இலங்கையின் முத்தொகுப்பு இலவச மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் பெருகிவிரும் மாற்று தொடர்புடைய பயன்பாடாக “அதுரு மிதுரு” வடிவமைக்கப்பட்டதன் மூலம் இந்த சமூகங்களின் உள்ளடக்கம் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுடன் டயலொக் இன் நீண்டகால அர்ப்பணிப்பு மேலும் காண்பிக்கப்பட்டுள்ளது.வி~ன் 2020 பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள http://dialogfoundation.org/what-we-do/vision-2020/ க்கு செல்லுங்கள்

Share this post