டயலொக் களுபோவில மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசியமான PPE Kits களை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காகவும் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காகவும் குறைந்த விநியோகத்தில் உள்ள அத்தியாவசிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களான PPE kits களை, களுபோவில மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கியது.

தற்போதைய சூழ்நிலையில், 20 மருத்துவமனைகளில் 27 வீடியோ அடிப்படையிலான telemedicine அலகுகளை உருவாக்க டயலொக் உதவியது, முப்படை மற்றும் காவல்துறையினரால் நிர்வகிக்கப்படும் அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கும் (quarantine centres) WiFi மற்றும் டயலொக் டெலிவிஷன் இணைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளது, IDH-க்கு இலவச இணைய இணைப்பு தீர்வுகள், video conference வசதிகள் மற்றும் மொபைல் சாதனங்களை வழங்கியது, மேலும் மனுசத் தெரண, சியத லெகதுகம மற்றும் ITN மனுசத்வயே சத்காரய செயற்றிட்டங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் 13 மாவட்டங்களிலும் (யாழ்ப்பாணம் உட்பட) 265 கிராமங்களில் 70,872 பேருக்கு உலர் உணவு பொதிகளை தினமும் விநியோகிக்கிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல முயற்சிகளில் இந்த நன்கொடை செயற்றிட்டமும் ஒன்றாகும். மேலும், 15 மில்லியன் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பாதுகாப்பாக இருப்பதனையும், வீட்டிலேயே இருப்பதனையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது

முதலாவது படத்தில் இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டீ அல்மேதா, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை இயக்குனர் வைத்தியர் அசேல குணவர்தன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மேல் மாகாண CFSS நிர்வாகி அதுல பிரதீப் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மேல் மாகாண குழும தொழில்நுட்ப பொறியியளாலர் இந்திக சுகததாச
இரண்டாவது படத்தில் இடமிருந்து வலம்: மாவட்ட பொது மருத்துவமனை நீர்கொழும்பு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துஷாரா டி அல்மேதா, நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை துணை இயக்குநர் டாக்டர் அன்டன் பெர்னாண்டோ, மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டீ அல்மேதா,
Share this post