Samsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDoctor App இன் மூலம் அரசாங்கத்தின் eHealth ஊடாக இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்க சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்திற்கு (MOH) Samsung tablets> இணைப்பு மற்றும் டெலிமெடிசின் தீர்வுகளை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக Samsung Global மற்றும் MyDoctor உடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியானது அரசாங்கத்திற்கு எவ்விதமான செலவும் இன்றி, நாடு முழுவதும் உள்ள 16 முக்கிய பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளில் காணப்படும் தொற்று நோய் இன்றிய (Non-Communicable Disease) கிளினிக்குகளை டிஜிட்டல் மயமாக்குவதையும் கோவிட் -19 தாக்கத்தில் பாதிக்கப்பட்ட NCD நோயாளிகளுக்கு அவர்களின் வழக்கமான மருத்துவருடன் அடிக்கடி ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வதனையும் இலகுபடுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வு வழங்குனரான MyDoctor> மருத்துவமனைகளில் இருந்து தொலைதுர்ரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கான நோய்களை கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சையினை வழங்க ஆலோசகர்களுக்கு உதவும் வகையில் தனது டிஜிட்டல் சுகாதார தளத்தை பயன்பாட்டிற்காக வழங்குகின்றது. இந்த Samsung சாதனங்கள் டயலொக் 4G இணைப்பால் இயக்கப்படும் MyDoctor இல் இருந்து டிஜிட்டல் ஹெல்த் தீர்வுகளுடன் வைத்தியர்கள் அந்தந்த நோயாளிகளுடன் ஆடியோ / வீடியோ அழைப்புகளில் ஈடுபடவும், மருந்தக மருந்துகளை வழங்கவும் (pharmacy prescriptions) மற்றும் MyDoctor App மூலம் ஆய்வக முடிவுகளை வழங்குவதுடன், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் ஏனைய நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதையும் கணிசமானளவு குறைக்கின்றது. இத்தகைய ஆலோசனை செயல்முறைகள் மிகவும் திறமையாகவும், நோயாளிகள் மீதான சுமையை குறைக்கவும் வாய்ப்பளிக்கின்றது. 16 மருத்துவமனைகளில் இந்த செயற்றிட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் MOH இன் NCD துறை, மற்ற மருத்துவமனைகளுக்கு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி கருத்து தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் உள்ள 16 முக்கிய பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளில் சிறந்த இணைப்பு, சாதனங்கள், டெலிமெடிசின் தீர்வுகளை வழங்கி போதனா வைத்தியசாலைகள் மற்றும் தொற்றுநோயற்ற (NCD) கிளினிக்குகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்த தேசிய முயற்சியில் எங்களுக்கு ஆதரவளித்த டயலொக், Samsung மற்றும் MyDoctor ஆகிய நிறுவனங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கோவிட் -19 தொற்று நோயின் நெருக்கடிக்கு மத்தியிலும் முக்கிய சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை எங்களுக்கு வழங்கியதற்காக டயலொக், Samsung மற்றும் MyDoctor ஆகிய நிறுவனங்களுக்கு நாங்கள் குறிப்பாக நன்றி கூறுகிறோம்” என தெரிவித்தார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “கோவிட் – 19 க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகளில், இந்த டெலிமெடிசின் தீர்வை செயல்படுத்திய Samsung Global மற்றும் MyDoctor க்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கான அணுகுமுறையினை கொண்ட சுகாதார அமைச்சகத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டின் eHealth முறையை மேலும் செயல்படுத்துவதும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களுக்கான டிஜிட்டல் சுகாதார தலையீடுகளின் சமமான அணுகல் மற்றும் நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதுமே இந்த நீண்டகால தீர்வுகளுக்கான எங்கள் நோக்கமாகும்” என கூறினார்.
Samsung நிறுவனத்தின் இலங்கையின் நிர்வாக இயக்குனர் Kevin SungSu YOU கருத்து தெரிவிக்கையில், இந்த கோவிட் – 19 காலகட்டத்தில் NCD நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 16 முக்கிய மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக மிக சமீபத்திய Samsung tablets களை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த சரியான நேரத்தில் டயலொக் மற்றும் MyDoctor உடன் கூட்டிணைந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மருத்துவமனைகளின் டெலிமெடிசின் நோக்கங்களுக்காக டயலொக் வழங்கிய இணைப்பால் இயக்கப்படும் Samsung Tab களில் MyDoctor App நிறுவப்படும். மேம்பட்ட சுகாதாரத்துறையின் சிறப்பான செயற்பாட்டிற்கு நம்பகமான தொழில்நுட்பம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் சுகாதார வல்லுனர்களையும் நோயாளிகளையும் மேம்படுத்துவதற்கான இந்த தொலைநிலை நோயாளி சிகிச்சை முயற்சியுடன் நாங்கள் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தற்போது நாடு எதிர்கொள்ளும் சவாலுக்கு எல்லா வகையிலும் பங்களிப்பினை வழங்குவதில் Samsung உறுதியாக உள்ளது” என தெரிவித்தார்.
MyDoctor, தலைமை நிர்வாக அதிகாரி திரு சமீர விஜேரத்ன கூறுகையில், இந்த தேசிய முயற்சிக்கு டயலொக், Samsung மற்றும் சுகாதார அமைச்சுடன் கூட்டிணைந்ததையிட்ட நாங்கள் நன்றி கூறுகின்றோம். MyDoctor app இன் மூலம் நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்த படியே இலகுவாக கிளினிக்குகளை அணுகுவதற்கான வாய்ப்பினை கொண்டுள்ளார்கள். மேலும், நோயாளிகள் எதிர்கால குறிப்புகளுக்காக App இல் அவர்களின் அனைத்து சுகாதார பதிவுகளையும் மருந்துகளையும் பதிவேற்றவும் பராமரிக்கவும் முடியும். இதனால், மருத்துவர்களின் ஆலோசனைகளைத் தொடங்குவதற்கு முன்பு நோயாளிகளின் இந்த சுகாதார சுயவிவரங்களை தொலைதூரத்தில் இருந்தே MyDoctor app வழியாக அணுக முடியும். இலங்கையில் சுகாதார முறையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த பிரமாண்டமான நடவடிக்கையை மேற்கொண்டதில் சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என கூறினார்.
Posted on சித்திரை 19, 2022