அத்தியாவசிய மருத்துவ சேவைகளை ஆதரிக்கும் IDH மருத்துவமனைக்கு முக்கியமான இணைப்பு தீர்வுகளை டயலொக் விரிவுபடுத்துகிறது

தற்போதைய COVID-19 நெருக்கடியின் போது மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை ஆதரிக்கும் முயற்சியாக, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, video conferencing வசதிகளுக்கான இலவச இணைப்புத் தீர்வுகளை விரிவுபடுத்தியது. மற்றும் நாட்டில் COVID 19 கட்டுப்பாடுகளை வழிநடத்தும் சுகாதார நிறுவனத்திடம் IDH – நிலையத்தில் உள்ள மருத்துவ ஊழியர்களை ஆதரிக்கும் வகையில் இணைய அணுகலினை வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் அமைக்கப்பட்டுள்ள IDH இன் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குனர்களுக்கு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பிற மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு ஒத்திசைவான தொலை தூர மருத்துவ உதவியை வழங்கியது.

டயலொக் பொறியியல் குழு ஒரே நாளில் அவசர IDH கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்ததுடன் அர்ப்பணிக்கப்பட்ட இணைய சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்களை நிறுவுதல், அதிவேக WiFi புரோட்பாண்ட் இணைப்பை எளிதாக்குதல் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான பல கையடக்க தொலைபேசி சாதனங்களை வழங்கல் போன்றவற்றை மேற்கொண்டது. கோவிட் -19 பரவுவதற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முன்னணியில் தங்கள் அயராத முயற்சிகளை விரிவுபடுத்துகையில், டயலொக் IDH க்கு முக்கியமான இணைப்புத் தீர்வுகள், video conferencing வசதிகளுடன் ஆதரிக்க முன்வந்ததுடன், நோயறிதல், நோயின் தன்மையினை குறைத்தல், நோயாளிகளைக் கண்காணித்தல், சுகாதாரத்தினை பேணல், மருத்துவ ஊழியர்களைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் அன்றாட அவசர சிகிச்சையை திறம்பட மற்றும் விரைவாக நடத்துவதில் கவனம் செலுத்தக்கூடிய தேவையான டிஜிட்டல் கருவிகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்கான மொபைல் சாதனங்களையும் வழங்கியது

Share this post