டயலொக் டெலிவிஷன், நெனச மற்றும் குரு TV கல்வி அலைவரிசைகளை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா குழுமம், நெனச சிங்களம், நெனச தமிழ் மற்றும் குரு டிவி அலைவரிசைகளை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பினை டயலொக் டெலிவிஷன் மற்றும் ViU App மூலம் விரிவுபடுத்தியுள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கற்றல் செயற்பாடுகள் தாமதமான போதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள பிள்ளைகளுக்கு கல்விக்கான சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதற்கான தீர்மானத்தில் டயலொக் உறுதியாக உள்ளது. டயலொக் டெலிவிஷன் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருவரும் இந்த அலைவரிசைகளை இலவசமாக பார்வையிட முடியும். நெனச சிங்களம், அலைவரிசை இலக்கம் 24 மற்றும் நெனச தமிழ் அலைவரிசை இலக்கம் 25 இல் ஒளிபரப்பப்படுவதுடன் தரம் 3 முதல் தரம் 13 வரையிலான அரசு பாடத்திட்டங்களுடனும் குரு டிவி அலைவரிசை இலக்கம் 22 இல் தரம் 5 முதல் தரம் 13 வரையில் அரசு பாடத்திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன் அவை அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றன. மேலும், 160 க்கும் மேற்பட்ட துணை பாடங்கள் மற்றும் கல்வி உள்ளடக்கங்களை டயலொக் வலையமைப்பில் எவ்விதமான டேட்டா கட்டணங்களும் இன்றி எந்தவொரு ஸ்மார்ட்போனிலும், ViU Hub மற்றும் ViU Mini ஆகியவற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும்.

டயலொக் டெலிவிஷன் வணிக பிரிவு தலைவர் சிரந்த டி சோய்சா, கருத்து தெரிவிக்கையில், ” நெனச சிங்களம், நெனச தமிழ் மற்றும் குரு TV ஆகிய கல்வி சார் அலைவரிசைகளை இலவசமாக விரிவுபடுத்தியுள்ளமையானது நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்கள் தங்களின் அபிலாஷைகளை அடைவதற்கும் சமமான கல்வியினை வழங்குவதற்கும் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாகும் இது அமைகின்றது. கோவிட் பரவல் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளை பெரிதுபடுத்தியதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி காட்டியிருந்தாலும், இந்த இடைவெளியைத் குறைப்பதில் டயலொக் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது” என தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களை அவர்களின் கல்வி முன்னெடுப்புகளை ஆதரிக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இது டயலொக்கின் மற்றொரு முயற்சியாகும். இந்த முயற்சிக்கு மேலதிகமாக, நெனச முன்முயற்சியின் கீழ் Nenasa TV, Nenasa Smart School, Nenasa App மற்றும் கட்டணமில்லா Nenasa 1916 தொலைதூர உதவி இலக்கம் போன்ற கல்வி தளங்களை டயலொக் வழங்குகிறது. வீட்டிலிருந்து ஆன்லைன் கற்றலை எளிதாக்குவதற்காக ‘நெனதிரி டேட்டா புவமைப்பரிசில்’ திட்டத்தின் கீழ் அவசியமான 100,000 பாடசாலை மாணவர்களுக்கு டேட்டா புலமைப்பரிசில்களை வழங்கவும் டயலொக் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், இ-தக்ஸலாவ தேசிய கற்றல் உள்ளடக்க மேலாண்மை அமைப்பு / கற்றல் மேலாண்மை அமைப்பு மற்றும் பல்கலைக்கழக மானியங்களின் கீழ் மாநில பல்கலைக்கழகங்களின் அனைத்து உத்தியோகபூர்வ மின்-கற்றல் தளங்களையும் எவ்விதமான டேட்டா கட்டணமும் இன்றி இலவசமாக வழங்குகின்றது.

Share this post