டயலொக் அறக்கட்டளை மூலம் Seth Sarana மற்றும் ‘Rally to Care’ ஆகியவற்றால் 4/21கடுவாபிடியவில் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கான ‘Life Healing Centre’ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

healing-center
நீர்கொழும்பு கடுவாபிடிய Life Healing Centre
healing-center
நீர்கொழும்பு கடுவாபிடிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள Life Healing Centre
 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளரீதியாக ஆதரவு வழங்குவதற்காக சான்றிதழ் பெற்ற நிபுணர் குழு தலைமையிலான Life Healing Centre’, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நீர்கொழும்பு கடுவாபிடிய பிரதேசத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமையின் கீழ் தொண்டு நிறுவனமான Rally to Care’ மற்றும் கொழும்பு மறைமாவட்டத்தின் சமூக நடவடிக்கை கழகமான Seth Sarana’ ஆகியவற்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டயலொக் வாடிக்கையாளர்கள் 15 மில்லியன் ரூபாவினையும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் 28.48 மில்லியன் ரூபாவினையும் நன்கொடையாக வழங்கியிருந்தார்கள். இந்த தொகையினை டயலொக் இருமடங்காக்கியுள்ளது. மேலும் ஆசிஆட்டா குழுமமானது Rally to Care செயற்றிட்டத்திற்கு 34.6 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்க முன்வந்தது. இந்த சமூகத்திற்கு வழங்கிய தாளாரா நன்மையின் மூலம் 106.56 மில்லியன் ரூபாய் என்ற மிகப்பெரிய நிதி தொகையானது திரட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட Life Healing Centre ஆனது வணக்கத்துக்குரிய கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர் கலாநிதி ஜே.டி அன்டனி ஜயகொடி, ஆசிஆட்டா குழுமத்தின் பெர்ஹாட் தெற்காசிய பிராந்தியத்தின் நிறுவன துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே ஆகியோரின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்டத்தின் சமூக நடவடிக்கைக் கழகமான ‘Seth Sarana’ உடன் இணைந்து ‘Life Healing Centre’ ஆனது ஆரம்பிக்கப்பட்டது. வணக்கத்துக்குரிய போதகர் குடும்ப திருத்தூதப் பணியின் இயக்குனரும் மற்றும் தேசிய குடும்ப Apostolate ருமான க்ளாட் நொனிஸ் அவர்களின் தலைமையில் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு வழங்கல் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது. Life Healing Centre இல் மன அழுத்தம், பிந்தைய மன உளைச்சல் பதட்டம் மற்றும் பிற உளவியல் சிகிச்சைகள் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களில் ஒரு பரவலான கலந்துறையாடல் மூலமாகவும் குழந்தைகள் இளம் பருவத்தினர் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான தனிப்பட்ட திட்டங்களின் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரையான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிலையத்திற்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த Life Healing Centre இல் பாதரிக்கப்பட்டவர்களுக்கான கண் பரிசோதனையானது Vision Care மூலமும் இரத்மலானை ஆடியோலெஜி மையத்தின் ஊடாக செவி தொடர்பான கேட்டல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த திறப்பு விழாவின் போது பார்வை தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டவர்களுக்கு மருந்துகளும் இலவச மூக்கு கண்ணாடிகளும் World Vision Lanka, நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. கேட்டல் தொடர்பாக பிரச்சினைகள் காணப்பட்டவர்களுக்கு இந்த நிதி தொகையின் மூலம் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையின் மூலம் அவரவர்களுக்கு அவசியமான மருந்துகளும் வவுச்சர்களும் ஆலனுழஉவழச குழுவினரால் வழங்கப்பட்டது.

Life Healing Center மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிகிச்சை முறை ஆலோசனையுடன் கூடிய குறுந்தகடுகளும் (CDS) ஆன்மிக கீதங்களும் வழங்க்கட்டது. நீர்கொழும்பு வென்னப்புவ மாரவில மாதம்பை சிலாபம் மினுவாங்கொடை திவுலப்பிடிய கம்பஹா ஜா-எல கந்தானை வத்தளை போலியகொடை ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலமான வானொலி நிலையமான Seth FM 103.1, தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் காயங்களுக்கான சிகிச்சையினையும் ஆன்மீக திட்டங்களையும் வழங்கி வந்தது.

மேலும் கொழும்பு மெடல் ஐக்கிய நாடுகள் சபையின் 2019 ஆம் ஆண்டின் நிறைவேற்று குழுவினால் கடுவாபிடிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 250 பாடசாலை மாணவர்களில் 100 பேருக்கு Life Healing Centre ஊடாக பாடசாலை பைகளும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது. ஏனையவை கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட 500 அதிகளவான மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்காகவும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட 250க்கும் அதிகளவான குடும்பங்களுக்குமான நிவார பணிகள் World Vision Lanka, Sarvodaya, My Doctor, Vision Care மற்றும் இரத்மலானை ஆடியோலெஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. Rally to Care தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்துக்கொள்ள http://dialogfoundation.org/rallytocare எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்

Share this post