ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான “ஷில்ப திரிய”உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் மற்றும் டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சி கடுவாபிடிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 287 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குகின்றது.

English | සිංහල

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சோகமான நிகழ்வுகளை ஒரு தேசமாக எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் அது. சோகமாக இருந்த போதிலும் இலங்கையர்கள் தேவையானவர்களுக்கு உதவுவதற்காகவும் துன்பங்களை சமாளிக்க அவர்களுக்கு தேவையாக பலத்தை அளிப்பதற்கும் காட்டிய ஆர்வம் சமூகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. கடுவாபிடிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதற்கும், அவர்களின் கனவுகளை தொடர தைரியமாக இருக்க அவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக நீண்டகால உதவித்தொகை திட்டம் – கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஷில்ப திரிய”டயலொக் அறக்கட்டளையின் ‘Rally to Care’ முன்முயற்சியுடன் ஒன்றிணைந்து டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தொடங்கப்பட்டது. கொழும்பின் பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஷில்ப திரிய nவியீட்டு நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்து உதவித்தொகையினை பெற்றுக்கொண்டார்கள்.

இந்த நிகழ்வின் போது கொழும்பின் பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித் அவர்கள் கடவுள் உங்களை ஒரு விசேட நபராகவே படைத்திருக்கிறார். உங்களை போன்ற அதே உருவம், பண்புகள், திறமைகள் கொண்ட இன்னுமொரு குழந்தையை இவ்வுலகில் காண்பது அரிதாகும். இதிலுருந்து அறிந்து கொள்ளக்கூடியது யாதெனில் கடவுள் உங்களை ஒரு விசேட நபராக உருவாக்கி உங்களுக்கென ஒரு தனிப்பட்ட அழைப்பினை விடுத்திருக்கிறார். அந்த அழைப்பினை உங்கள் நம்பிக்கையினூடாக தேடிப்பெற்று உங்களுக்கென கடவுள் வழங்கியுள்ள திறமைகளின் மூலமாக உங்கள் வாழ்க்கையினை உங்களுக்கும் மனித சமுகத்திற்கும் பயனுள்ளதாக உங்களாலேயே கட்டியமைத்து கொள்ள முடியும். இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தினால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் யாதேனும் தடை ஏற்பட்டிருக்குமெனின் உங்களுடைய நலன்விரும்பிகளின் சகோதரத்துவத்தின் மூலமாக கிடைக்கும் இந்த நன்கொடையினை கடவுளால் வழங்கப்படும் வெகுமதி எனப்பெற்று உங்கள் எதிர்காலத்தினை ஆசிர்வாதத்துடன் கூடிய சிறப்பான நிலைக்கு மாற்றியமைத்துக்கொள்ள முயற்சியினை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு கிடைக்கும் இந்த உதவிக்கரங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதன் மூலமாக உங்கள் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு சமூகத்திற்கு சிறந்த பிரஜையாக உருவெடுங்கள். உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என கூறினார்.

கல்வியின் ஆற்றல் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய இயக்குனர் செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு அருற்பணி லோரன்ஸ் ராமநாயக்க அவர்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக வளர உதவுவதே எங்கள் கனவாகும். நீங்கள் பேரழிவிற்கு ஆளானீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதில் கடவுளின் பாதுகாப்பை நீங்கள் அனுபவித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், இந்த புதிய ஆரம்பம் கல்வியை உங்கள் வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வெளிச்சம். கல்வி என்பது ஒரு பயணம். அது இருளில் இருந்து வெளியேறும் பயணம். நீங்கள் பல வாய்ப்புகளை சந்திக்கும் இடம் இது. கல்வி என்பது தெரியாததை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், தவறுகளை சரிசெய்வதும் கூட (Learn to unlearn) ஆகவே, இந்த கல்வி உதவித்தொகையை நீங்கள் கடவுளிடமிருந்து பரிசாகப் பெற்றுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேசத்திற்கு ஒளியைக் கொடுக்கும் குழந்தைகளாக வாழவும் குடிமகனின்; பொறுப்புடன் கடமையாற்றவும் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களாலும் பரிசுத்த ஆவியின் முன்னிலையில் ஆசீர்வதிப்பாராக. ஆகையால் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் உங்களுக்கு அன்பின் பரிசு என்பதில் கவனமாக இருங்கள். அதை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பிரந்த சேதத்திற்கு வெளிச்சம் தரும் குழந்தைகளாக வாழ்க என தெரிவித்தார்.

டயலொக் அறக்கட்டளையின் சார்பாக குழந்தைகளுக்கு அவர் அனுப்பிய செய்தியில் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான உலகின் நம்பிக்கை, குழந்தைகள் ஆவர். மேலும் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான எங்கள் இலக்கு கல்வி ஆகும். இந்த முன்முயற்சியின் மூலம் நிர்கதி நிலையை அடைந்த குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருப்பதை உறுதி செய்ய நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, அத்தகைய நம்பிக்கை மற்றும் வாய்ப்பினை வழங்கிட முன்வந்துள்ளோம். டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சியின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீண்டகால கல்வியை செயல்படுத்துவதற்கான எங்கள் பணியை நிறைவேற்றுவதில் இந்த உதவித்தொகை திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது – இது டயலொக் வாடிக்கையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் (வெளிநாட்டு மற்றும் உள்ளூர்), வணிக பங்காளிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து அவர்களின் தாராள ஆதரவுடன் நிறுவப்பட்டதாகும். இந்த உதவித்தொகை வசதி மூலம் இந்த குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் ஆர்வங்களைத் தொடரவும், முன்னுதாரண இலங்கையர்களாக வளரவும் ஒரு வாய்ப்பை வழங்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கையும் எங்கள் விருப்பமும் ஆகும் என தெரிவித்திருந்தார்.

“ஷில்ப திரிய”நீண்டகால உதவித்தொகை திட்டத்தின் மூலம் கடுவாபிடிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 185 குழந்தைகளுக்கும் கொச்சிக்கடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 102 குழந்தைகளுக்கும் மொத்தமாக 287 குழந்தைகளுக்கு நீண்டகால உதவித்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த குழந்தைகள் தாம் 19 வயதை அடையும் வரை இந்த உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்களின் வயதிற்கமைய அவர்களுக்கு வழங்கப்படும் தொகை தீர்மானிக்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் நிதியானது அவர்களின் பெயரில் ஆரம்பிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் (ஒவ்வொரு மாதத்தின் 15ஆம் திகதி) வைப்பிலிடப்படும்.

“ஷில்ப திரிய” வை போலவே மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட 71 குழந்தைகளுக்கான நீண்டகால உதவித்தொகை திட்டம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. சியோன் தேவாலயத்தின் ஆயர் ரோஷன் மகேசன் முன்னிலையில் Rally to Care முன்முயற்சியின் பிரதிநிதிகள் சர்வேதயா மற்றும் பிற பங்காளர்கள் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

Rally to Care அறக்கட்டளை நிதிக்கு சர்வோதயா, World Vision Lanka, My Doctor” Vision Care இரத்மலானை Audiology Center கூட்டாளர்களாக இணைந்தன. நிவாரண முயற்சியின் அங்கமாக, இந்த சோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநோயாளர் ஆதரவு, கடுமையான காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய ஆதரவு, 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலையான கல்வி உதவித்தொகை மற்றும் உளவியல் சமூக மறுவாழ்வு ஆதரவை வழங்கல் என்பனவும் நோக்கங்களாக அடங்கியுள்ளன.

கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித், இயக்குனர் செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு அருட்பணி. லோரன்ஸ் ராமநாயக்க, டயலொக் ஆசிஆட்டா குழும பெர்ஹாட் – நிறுவன நிறைவேற்று துணை தலைவர் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ ஆகியோர் சங்ரி-
இடமிருந்து வலம் : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சுயாதீனமான நிர்வாக இயக்குனர் முகமது வஜீர் முஹ்சின், தொலைத்தொடர்பு ஒழுங்குமறை ஆணையகத்தின் இயக்குனர் பொது முகாமையாளர் ஓஹாதா சேனாநாயக்க, ஹங்க்ரி-லா ஹோட்டல் லங்கா பிரைவட் லிமிட்டட் இன் இயக்குனர் திரு. ஆர். சஜாத் மவ்ஸீன், மலோசியாவின் இலங்கைக்கான உயத் ஸ்தானிகர் திரு. டான் யாங் தாய், டயலொக் ஆசிஆட்டா கழும பெர்ஹாட், தெற்காசிய பிராந்தியத்தின் நிறுவன உப தலைவர் நிர்வாக அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, அதிவணக்கத்துக்குரிய கொழும்பு பேராயர் மெல்கம் கருதினால் ரஞ்சித், செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு இயக்குனர் இருட்பணி லோரன்ஸ் ராமநாயக்க, கொச்சிக்கடை சென்.அந்தோனி ஆலயத்தின் வணக்கத்துக்குரிய ஜுட் ராஜ் பெர்னான்டோ, காடுவாபிடிய பாதிரியார் திருச்சபை வணக்கத்துக்குரிய மஞ்சுல நிரோ~ன் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்ஹ
Share this post